தடுப்பூசி ஏற்றப்பட்டதையடுத்து பணிப்பாளர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள தகவல்!

தடுப்பூசி ஏற்றப்பட்டதையடுத்து பணிப்பாளர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள தகவல்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 3,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டவுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த .சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்

இன்று காலை 9 மணியிலிருந்து வடக்கு மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தாதியர் பயிற்சி கல்லூரியிலும் குறித்த செயற்பாடுஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது வரை 400 சுகாதார சேவையாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது

அதேபோல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சுகாதார பணியாளர்கள், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள சுகாதார சேவையாளர்கள் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் சுகாதார சேவையாளர்கள் உட்பட 3,000 பேருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றப்பட்ட உள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.