யாழில் நடு வீதியில் பட்டதாரி இளைஞனின் விபரீத முடிவு! பெரும் சோகத்தில் குடும்பம்

யாழில் நடு வீதியில் பட்டதாரி இளைஞனின் விபரீத முடிவு! பெரும் சோகத்தில் குடும்பம்

யாழ் உரும்பிராய் பகுதியில் நேற்று மாலை பட்டதாரி ஒருவர் ஹயஸ் வாகனத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருதனாமடம் ஆஞ்சனேயர் கோவிலில் கும்பிட்டுவிட்டு சகோதரருடன் மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் இருந்து வந்த மயூரன் எதிரே வந்த ஹயஸ் வாகனத்தின் முன் பாய்ந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது, ஆனாலும் இது தற்கொலையா? அல்லது விபத்தா? என்கின்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது மோட்டார் சைக்கிள் ஓடிக்கொண்டிருந்த சகோதரனும் விழுந்து படுகாயமடைந்துள்ளார், 25 வயதான மயூரன் விளையாட்டு பயிற்றுவிப்பாளராக தெரிவு செய்யப்பட்டவர்.