வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா
வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த 7 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி - 3 பேர் மன்னார் நானாட்டானைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் ஒரு வாரத்துக்கு மேலாக சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.
மன்னார் வைத்தியசாலையில் ஊழியர் ஒருவரும் அங்கு வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை முல்லைத்தீவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.