கட்டுப்பாடுகளை தளர்த்தியது கட்டார்: முகமூடி அணியாமல் வெளியில் உடற்பயிற்சி செய்ய அனுமதி!

கட்டுப்பாடுகளை தளர்த்தியது கட்டார்: முகமூடி அணியாமல் வெளியில் உடற்பயிற்சி செய்ய அனுமதி!

சுமார் 2.8 மில்லியன் மக்கள்தொகை கொண்ட வளைகுடா நாடான கட்டார், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.

இதன்படி, இன்று (வியாழக்கிழமை) முதல் மக்கள் முகமூடி அணியாமல் வெளியில் உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், வணிக மற்றும் சேவைத் துறைகளின் வேலை நேரத்தை நீடிக்கப்படுகின்றது.

வணிக மற்றும் சேவை நடவடிக்கைகளுக்கு அனுமதிக்கப்பட்ட வேலை நேரம் உள்ளூர் நேரப்படி காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இருக்கும் என்று வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பல்பொருள் அங்காடி, மருந்தகங்கள், உணவக விநியோக சேவைகள் மற்றும் வேறு சில அத்தியாவசிய சேவைகள், இயல்பாக செயற்படும். வணிக வாளகங்கள், சில்லறை விற்பனை நிலையங்கள், வணிக மையங்கள், சுகாதார கழகங்கள், முடிதிருத்தும் கடைகள் மற்றும் வரவேற்புரைகள் மூடப்படாமல் இருக்கும்.

சாரதி உட்பட நான்கு பேர் ஒரே வாகனத்தில் இருக்க அனுமதிக்கப்படுவார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் தனியார் வாகனங்களுக்கு நான்குக்கும் மேற்பட்டவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகின்றது. அதே நேரத்தில் பேருந்துகள் பாதி திறனில் தொடர்ந்து இயங்கும்.

மேலும், கொவிட்-19 தடமறிதல் பயன்பாட்டை பயனர்கள் கட்டாயம் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இல்லையெனில், 55,000 டொலர்கள் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.