யானையை கொன்று தந்தம் எடுத்தவர்கள் துப்பாக்கியுடன் கைது!
முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட களிக்காடு காட்டுப்பகுதியில் தந்தத்தை உடைய யானை ஒன்று சுட்டு கொலை செய்து விட்டு தந்தங்கள் எடுக்கப்பட்ட நிலையில் இனம் காணப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார்,முல்லைத்தீவு பொலிஸார்,படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட வேளை முள்ளியவளைப்பகுதியில் இரண்டு தந்தங்களுடனும் இருவரை இன்று 29.01.21 கைது செய்துள்ளார்கள்.
இவர்களிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்களிடம் முள்ளியவளை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.