தேசிய அளவில் தடுப்பூசி வழங்கும் திட்டம்! இலங்கை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் - இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட நம்பிக்கை

தேசிய அளவில் தடுப்பூசி வழங்கும் திட்டம்! இலங்கை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் - இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட நம்பிக்கை

தேசிய அளவில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை பெப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறந்த தலைமைத்துவம் காரணமாக தடுப்பூசி பயன்பாடு எதிர்பார்த்ததை விட மிக விரைவில் தொடங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நரஹன்பிட்ட இராணுவ வைத்தியலையில் இன்று காலை நடைபெற்ற முதலாவது தடுப்பூசியை வழங்கும் நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

மேலும் தடுப்பூசிகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியதற்காக இந்தியாவுக்கு அரசாங்கத்தின் சார்பாக பாராட்டுகளை தெரிவித்த அவர், கோவிஷீல்ட் தடுப்பூசிகளைத் தவிர்த்து வேறு தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

தடுப்பூசி பயன்பாடு தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.