சில பிரதேசங்களில் இன்றும் கடும் மழை பொழியக்கூடும்..!

சில பிரதேசங்களில் இன்றும் கடும் மழை பொழியக்கூடும்..!

வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியக் கூடும்  என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும்,பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 100 மி.மீ வரை கடும் மழை பொழியக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், பிற்பகல் 2 மணிக்குப் பின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், தெற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், களுத்துறை மாவட்டத்தில் சில இடங்களிலும் 75 மி.மீ மழை பொழியக் கூடும்.