யாழில் இராணுவத்தினரின் துணிகர செயல்!
யாழ். மாவட்ட எழுதுமட்டுவாழ் ஆசைப்பிள்ளை ஏற்றத்தில் புகையிரதக் கடவை ஒன்றினை கடப்பதற்கு கனரக வாகனம் ஒன்று முயன்றுள்ளது.
புகையிரத சமிஞ்சை ஒலி,ஒளி போடப்பட்டிருந்த போதிலும் அதை பொருட்படுத்தாது கடவையை கடக்க முயன்ற போது அதிவேக தொடரூந்து வந்துள்ளது.
உடனே கடவையை கடக்க முயன்ற கனரக வாகனம் செயலிழந்து நடு கடவையில் நின்றுள்ளது.
இதன் போது அங்கிருந்த சில இளைஞர்கள் புகையிரதம் நெருங்க முன் வாகனத்தை கடவையை விட்டு தள்ள முற்பட்டும் முயற்சி பயனளிக்கவில்லை.
உடனே குறித்த இளைஞர்கள் புகையிரதம் நெருங்கி வருவதை அவதானித்த இளைஞர்கள் உடனே தமது மேலாடையை கழட்டி புகையிரதத்தை நிறுத்தக் கோரியுள்ளனர்.
ஆனாலும் அதிவேக புகையிரதம் என்பதால் வேகத்தை கட்டுபடுத்த தாமதமானது. எனினும் அங்கு ஏ9 வீதி ஊடாக வருகை தந்த இராணுவத்தினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வாகனத்தை தள்ளி கரைசேர்த்தனர்.