யாழ்ப்பாணம் வந்து திருகோணமலை திரும்பியவருக்கு கொரோனா
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைக்கு வருகை தந்து திருகோணமலைக்கு திரும்பியவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அவரிடம் எழுதுமட்டுவாழ் வீதித் தடையில் வைத்து பெறப்பட்ட மாதிரியின் அடிப்படையிலேயே அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
தொற்றால் பாதிக்கப்பட்டவர் தற்போது திருகோணமலை திரும்பியுள்ள நிலையில் அந்த மாவட்ட சுகாதாரத் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு வந்து செல்வோரிடம் எழுதுமட்டுவாழில் வைத்து மாதிரிகள் பெறப்படுகின்றன. அவ்வாறு மாதிரிகள் பெறப்பட்டவர்களில் ஒருவருக்கே இன்று தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 340 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் ஒருவருக்கே தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.