கொரோனா தொற்றினால் இறந்த 100,000 பேரை எண்ணி வருந்துவதாக பிரதமர் தெரிவிப்பு

கொரோனா தொற்றினால் இறந்த 100,000 பேரை எண்ணி வருந்துவதாக பிரதமர் தெரிவிப்பு

இங்கிலாந்தில் ஒரு இலட்சத்திற்கும் மேல் உயிரிழப்பு பதிவாகியுள்ளதையிட்டு மிகவும் வருந்துவதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

மேலும் 1,631 பேர் உயிரிழந்துள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 100,162 ஆக அதிகரித்துள்ளது.

டவுனிங் ஸ்ட்ரீட் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அந்த மோசமான புள்ளிவிவரத்தில் உள்ள துக்கத்தை கணக்கிடுவது கடினம் என்றும் பயங்கரமான மற்றும் சோகமான உயிரிழப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாளில் உயிரிழந்த அனைவருக்காகவும் தான் மிகவும் வருந்துவதாகவும் பிரதமராக உள்ள காலத்தில் அரசாங்கம் செய்த எல்லாவற்றிற்குமான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாகவும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.

தொற்று அடையாளம் காணப்பட்டதில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதிவரை நாட்டில் 50 ஆயிரம் உயிரிழப்புக்களே பதிவாகியிருந்த நிலையில் வெறும் 76 நாட்களில் அந்த எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.