யாழ். தீவக மக்களின் வாழ்வாதாரத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை
யாழ். தீவக மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்திற்கொண்டு புகையிலைச் செய்கைக்கு ஈடான மாற்றுப் பயிர்ச்செய்கை அறிமுகப்படுத்தும் வரை தொடர்ந்தும் புகையிலைப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் போதே இந்த அனுமதி கூட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் அங்கஜனால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கமக்கார அமைப்பு தமது முன்மொழிவில்;
நாராந்தனை கமக்கார அமைப்பிற்கு உட்பட்ட ஜே/55,ஜே/56,ஜே/57 மற்றும் ஜே/58 கிராம அலுவலர் பிரிவு மக்களின் வாழ்வாதாரமாக புகையிலைச் செய்கை காணப்படுகிறது.
புகையிலைக்குப் பதிலான நிரந்தர மாற்றுப் பயிர்ச்செய்கை அறிமுகப்படுத்தப்படும் வரை புகையிலைச் செய்கையை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனர்.