அரச மாவட்ட செயலகமொன்றில் பல அதிகாரிகளுக்கு கொரோனா

அரச மாவட்ட செயலகமொன்றில் பல அதிகாரிகளுக்கு கொரோனா

கம்பகா மாவட்ட காணித்திணைக்களத்தில் சுமார் 15 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அலுவலகத்தில் பணியாற்றும் பலர் நேற்றையதினம் (25) பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். வெளியான முடிவுகளின் அடிப்படையில், பலருக்கு கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

அலுவலகத்தில் பணிபுரியும் மற்றொரு குழுவிற்கு காய்ச்சல் மற்றும் சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் இருப்பதாக தகவல் கிடைத்த பின்னர் கம்பகா சுகாதார பரிசோதகர் 100 பேரிடம் பிசிஆர் பரிசோதனைகளையும், மேலும் 31 பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகளையும் நடத்தியுள்ளார்.

இது தொடர்பில் கம்பகா சுகாதார மருத்துவ அதிகாரி டொக்டர் சுபாஷ் சுபசிங்க கூறுகையில், அன்டிஜன் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 10 பேர் கொவிட் நோய்த்தொற்றுடன் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர், மேலும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் இன்னும் பெறப்படவில்லை.

கம்பகா சுகாதார பொதுச் பரிசோதகர் தெரிவிக்கையில், அண்மையில் கம்பகா மாவட்ட காணி திணைக்களத்திற்கு சேவைகளைப் பெற வந்தவர்கள் இருந்தால், அவர்கள் இது குறித்து அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.