அமைச்சர் டக்ளஸ் விடுத்த உத்தரவு
இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி பிரவேசிப்பது தொடர்கதையாகி விட்டது.
இதனால் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் அவர்களின் தொழில் உபகரணங்களும் அழிவடைகின்றன.
இந்த நிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறி பிரவேசிப்பதை தவிர்க்கும் வகையில் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த மூவர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சு, கடற்றொழில் திணைக்களம், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு பிரிவினர் ஆகியோரிடம் கலந்துரையாடல்ஙகளை நடத்தி பரிந்துரைகளை முன்வைக்குமாறு அமைச்சர், உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அண்மையில் நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் றோலர் கடகு மூழ்கி நான்கு மீனவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.