ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்த சுசித்ராவின் வீடியோ

ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்த சுசித்ராவின் வீடியோ

தமிழ் திரையில் மாறுபட்ட குரலால் பல பாடல்கள் மூலம் பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்களை பெற்றவர் பாடகி சுசித்ரா. பிரபல வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

அண்மைகாலமாக அவர் யோகா, சமையல் கலையில் ஆர்வம் காண்பித்து வந்த பாடகி சுசித்ரா, தற்போது தமிழக மக்களை அதிகம் பேச வைத்துள்ள சாத்தான் குளம் காவல் நிலையத்தில் இறந்து போன ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் ஆகியோரை பற்றி பேசி உள்ளார்.

சாத்தான் குளம் சம்பவத்தை அமெரிக்காவில் போலிசாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்ட் சம்பவத்தோடு ஒப்பிட்டு பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டை தாண்டி இந்த செய்தியை கொண்டு செல்ல ஆங்கிலத்தில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.