பாடசாலை மாணவர்கள் பலருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...!

பாடசாலை மாணவர்கள் பலருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...!

பாடசாலை மாணவர்கள் பலருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளமை இன்று தெரியவந்துள்ளது.

இதற்கமைய குளியாபிட்டிய, திருகோணமலை. கதிர்காமம் மற்றும் பசறை ஆகிய பகுதிகளிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளது.

பசறை மத்திய மகா வித்தியாலத்தில் மேலும் 5 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானமையை அடுத்து பாடசாலையில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 10 பேர் கடந்த 22 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

கதிர்காமம் மற்றும் செல்லக்கதிர்காமம் பகுதிகளிலுள்ள இரண்டு பாடசாலைகளில் இரண்டு மாணவர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்கள் இருவரும் தரம் 11 இல் கல்வி பயில்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, திருகோணமலை பகுதியில் 3 பாடசாலைகளை சேர்ந்த 99 மாணவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலைகளின் ஆசிரியர் மற்றும் இரண்டு மாணவர்களுக்கு தொற்றுறுதியானமையை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தரம் மூன்று மற்றும் 10 இல் பயிலும் இரண்டு மாணவர்களுக்கே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் தொற்றுறுதியான ஆசிரியை தரம் 2, 5 மற்றும் 10 இல் பயிலும் மாணவர்களுக்கு கற்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.