லண்டனில் காதலன்! கொழும்பில் காதலியான யாழ் மாணவிக்கு இப்படி ஒரு நிலை

லண்டனில் காதலன்! கொழும்பில் காதலியான யாழ் மாணவிக்கு இப்படி ஒரு நிலை

யாழ் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் கொழும்பில் தனது கர்ப்பத்தைக் கலைக்க முற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

பிரபல தமிழ் பல்கலைக்கழகம் ஒன்றில் கற்கும் குறித்த மாணவியின் காதலன் லண்டனில் உயர்கல்வி கற்றுவருவதாகவும் தெரியவருகின்றது, வெள்ளவத்தைப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தனது பாட்டி சுகவீனமுற்றிருந்ததால் அவரைக் கவனிப்பதற்காக குறித்த மாணவி கடந்த செப்டம்பர் மாதம் அங்கு சென்று தங்கியிருந்துள்ளார்.

இந் நிலையிலேயே குறித்த மாணவி நேற்று முன்தினம் அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் இரத்தம் வெளியேறிய நிலையில் குளியலறைக்குள் மயங்கி கிடந்ததாகத் தெரியவருகின்றது.

யுவதியின் அனுமதியுடன் அடுக்குமாடிக்குடியிருப்புப் பகுதியில் உள்ள பாட்டியின் வீட்டுக்கு அன்று காலை நடுத்தர வயதுடைய பெண்மணி ஒருவர் வந்து சென்றதாகவும் அதன் பின்னரே யுவதி மயக்கமடைந்துகிடந்ததாகவும் குடியிருப்பில் வசிக்கும் ஏனையவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பாட்டி குக்குரல் இட்டு கத்தியபோதே அவர்கள் யுவதியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள்.

யுவதிக்கு கருக்கலைப்பு நடந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்களால் குடியிருப்பாளர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இவரின் காதலர் லண்டனில் உள்ள நிலையில் இச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.