இங்கிலாந்து அணி 339 ஓட்டங்கள்..!

இங்கிலாந்து அணி 339 ஓட்டங்கள்..!

இலங்கை அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று நிறைவடைந்தது.

இன்றைய தினம் போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி, ஆட்ட நேர முடிவில் 9 விக்கட்டுக்களை இழந்து 339 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் 186 ஓட்டங்களை பெற்ற நிலையில், ஆட்டமிழந்தார்.

முன்னதாக இலங்கை அணி, தமது முதல் இன்னிங்ஸில் 381 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தமை குறிப்பிடத்தக்கது.