ரசிகர்களுக்கு அட்வைஸ் சொன்ன தமன்னா

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்து இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. ஐதராபாத்தில் படப்பிடிப்புக்காக வந்த தமன்னா கொரானா தொற்று உறுதியானது. கொரானாவால் உடல்நிலை பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து காணப்பட்டார். கொரானாவிலிருந்து மீண்டு உடல் நிலை தேறியபிறகும் படங்களில் நடிக்காமல் தவிர்த்து வந்தார்.

 

பின்னர் உடல் பூசிய நிலையில் சில படங்கள் சமூகவலைதளங்களில் வெளியானது. பொதுவாக நடிகைகள் தங்களது உடலை கட்டுகோப்பாக வைத்திருப்பார். அதிலும் நடிகை தமன்னா அறிமுகமானது முதலே ஒரேமாதிரியான உடல் கட்டமைப்போடு இருந்துவந்தார். இந்நிலையில் தன் உடலை மெருகேற்ற தீவிர உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். 

 

தமன்னா

 

அப்படி உடற்பயிற்சி மேற்கொண்ட வீடியோவை ரசிகர்களுக்கு தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு அறிவுரை சிலவற்றை கூறியுள்ளார். அதில் நீங்கள் உச்சபட்ச பயிற்சி என்ற பெயரில் உடலை வருத்தவேண்டாம். 2 மாதம் சாதாரண பயிற்சியை மேற்கொண்டாலே போதும், பழைய ஆரோக்கியத்தை பெறலாம். தினமும் பயிற்சி செய்யுங்கள், என்னைபோல் பழைய நிலைக்கு திரும்பலாம் என்று கூறியுள்ளார்.