இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் திஸர பெரேராவுக்கு எச்சரிக்கை...!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் திஸர பெரேராவுக்கு எச்சரிக்கை...!

கிரிக்கெட் வீரர்களுடன் சமூக வலைத்தளங்களில் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் என திஸர பெரேராவுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை கடைசியும் முதலுமான எச்சரிக்கையாக விடுக்கப்பட்டுள்ளது என நம்பிக்கைக்குரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் கிரிக்கெட் வீரரான ஷெஹான் ஜயசூரியவுடன் அண்மையில் பிரச்சினை ஏற்படுத்திக் கொண்டு அதனை வாக்குவாதமாக மாற்றிக்கொண்ட காரணத்தினாலேயே அவருக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.