பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர்களுக்கு கிடைத்த தீர்ப்பு...!

பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர்களுக்கு கிடைத்த தீர்ப்பு...!

14 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் மாதம் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு சிலாபம் நீதவான் நீதிமன்றில் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அத்துடன் குறித்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்து அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் குறித்த சிறுமியின் தாயின் சகோதரியின் கணவர் மற்றும் அவரது சகோதரர் என ஆரச்சிக்கட்டுவ காவல்துறை தெரிவித்துள்ளது.

சிறுமியின் பெற்றோர் ஆரச்சிக்கட்டுவ காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

43 மற்றும் 50 வயதுடைய சந்தேக நபர்கள் ஆரச்சிக்கட்டுவவில் வசிப்பதுடன்இ குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரச்சிக்கட்டுவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்