யாழ்ப்பாணம் அல்வாயில் உயிரிழந்த குடும்பஸ்தரின் மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பிவைப்பு
யாழ்ப்பாணம் அல்வாயில் உயிரிழந்த குடும்பஸ்தர் ஒருவரின் இறப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் அவரின் உடற்கூற்றுக்கள் பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் அல்வாய் கிழக்கு கயிலாந்தோட்டத்தை சேர்ந்த கிருஷணன் பிரதீபன் வயது 38 என்பவர் முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது முச்சக்கர வண்டி தடம்புரண்டுள்ளது.
இதன்போது வீதியில் கிடந்த இவரை விசேட தேவைக்குட்பட்ட நபர் ஒருவர் அழைத்துச்சென்று வீட்டில் விட்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் இரவு 9.30 மணியளவில் அவரின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தையடுத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குச்சென்ற பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா விசாரணைகளை மேற்கொண்டதுடன் அவரின் உடற்கூற்றுக்கள் பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.