அமைச்சர் டக்ளஸின் தீவிர முயற்சிக்கு கை மேல் கிடைத்தது பலன்
அம்பன் புயலினால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் பப்பாசி பயிர்ச் செய்கையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட தொடர் முயற்சியின் பலனாக, இறுதிக் கட்ட நடவடிக்கை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தினைச் சேர்ந்த 2155 வாழைப் பயிர் செய்கையாளர்களுக்கு சுமார் 25.5 மில்லியன் ரூபாய்களும் 47 பப்பாசிப் பயிர்செய்கையாளர்களுக்கு சுமார் 3 இலட்சம் ரூபாய்களும் விரைவில் வழங்கி வைக்கப்படவுள்ளது.
கடந்த மே மாதம் வீசிய அம்பன் புயல் காரணமாக யாழ்பபாணத்தில் கோப்பாய், ஊரெழு, அச்சுவேலி உட்பட பல்வேறு பிரதேசங்களிலும் இருந்த பப்பாசி மற்றும் வாழைத் தோட்டங்கள் சுமார் 500 ஏக்கர் வரையில் அழிவடைந்திருந்தன.
அப்போது நிலவிய கடுமையான கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் குறித்த பிரதேசங்களுக்கு நேரடியாக சென்று நிலமைகளை அவதானித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஏற்பட்ட அழிவுகளுக்கு அரசாங்கதினால் நஸ்டஈடு வழங்குவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதியளித்ததுடன், அழிவுகள் தொடர்பான மதிப்பீட்டை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசாங்க அதிபரை அறிவுறுத்தியிருந்துடன் அதுதொடர்பாக அமைச்சரவையின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தார்.
இருப்பினும், பப்பாசி மற்றும் வாழைத் தோட்டங்கள் அழிவடைகின்ற போது நஸ்டஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் எவையும் விவசாய அமைச்சிடமோ அல்லது அனர்த்த முகாமைத்துவ அமைச்சிடமோ இல்லாத நிலையில் நஸ்டஈடு வழங்குவதில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டிருந்தது.
எனினும், குறித்த விடயத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த நிலையில், விசேட அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக குறித்த அழிவுகளுக்கு நஸ்ட ஈட்டினை வழங்குதவற்கு ஜனாதிபதியினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அமைச்சவை அங்கீகாரமும் வழங்கப்பட்ட நிலையில், தற்போது குறித்த நஷ;ட ஈடுகளை வழங்குதவற்கான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்று முன்னர், 1997 ஆம் ஆண்டு ஏற்பட்ட இயற்கை அழிவு காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் யாழ். மாவட்ட வாழைப் பயிர்ச் செய்கையாளர்கள் நஷ;ட ஈட்டினைப் பெற்றிருந்த நிலையில், அதன்பின்னர் அம்பன் புயலினால் ஏற்பட்ட அழிவுகளுக்கே நஷ்ட ஈட்டினைப் பெற்றுக் கொள்கின்றனர்.
அத்துடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் மேற்கொண்ட முயற்சியின் பலனாக இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படுகின்ற அழிவுகளுக்கான காப்புறுதித் திட்டத்தில் வாழைப் பயிர்ச் செய்கையும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.