முதல் அதிகாரபூர்வமான கூடைப் பந்தாட்ட போட்டி மசாச்சூசெட்டில் இடம்பெற்ற நாள்: 20-1-1892

முதல் அதிகாரபூர்வமான கூடைப் பந்தாட்ட போட்டி மசாச்சூசெட்டில் இடம்பெற்ற நாள்: 20-1-1892

கனடாவில் பிறந்து ஐக்கிய அமெரிக்காவில் மாசசூசெட்ஸ் நகரில் வாழ்ந்த முனைவர் ஜேம்ஸ் நெய்ஸ்மித் என்பவர் பால்கனியில் கூடையைத் தொங்கவிட்டு அதில் பந்தை போட முயன்று விளையாடியதில் 1891-ல் இந்த விளையாட்டு பிறந்தது. பின்னர், 1892ம் ஆண்டு ஜனவரி 20-ந்தேதி அதிகாரபூர்வமான ஆட்டம் நடைபெற்றது. இன்றை நாள் வட அமெரிக்காவில் மிகப்பெரிய கூடைப்பந்தாட்டச்

 

கனடாவில் பிறந்து ஐக்கிய அமெரிக்காவில் மாசசூசெட்ஸ் நகரில் வாழ்ந்த முனைவர் ஜேம்ஸ் நெய்ஸ்மித் என்பவர் பால்கனியில் கூடையைத் தொங்கவிட்டு அதில் பந்தை போட முயன்று விளையாடியதில் 1891-ல் இந்த விளையாட்டு பிறந்தது. பின்னர், 1892ம் ஆண்டு ஜனவரி 20-ந்தேதி அதிகாரபூர்வமான ஆட்டம் நடைபெற்றது.

இன்றை நாள் வட அமெரிக்காவில் மிகப்பெரிய கூடைப்பந்தாட்டச் சங்கமும் உலகில் மக்கள் செல்வாக்கு மிகுந்த கூடைப்பந்தாட்டச் சங்கமும் ஆக என்.பி.ஏ. காணப்படுகிறது. ஐரோப்பாவின் கூடைப்பந்தாட்டச் சங்கங்களில் ஐரோலீக் மிகப்பெரியதும் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்ததும் ஆகும். சீனக் கூடைப்பந்தட்டச் சங்கம், ஆஸ்திரேலிய தேசியக் கூடைப்பந்தாட்டச் சங்கம், தென்னமெரிக்கச் சங்கம் உலகில் வேறு சில குறிப்பிட்டதாக்க கூடைப்பைந்தாட்டச் சங்கங்கள் ஆகும்.

 


"ஃபீபா", அல்லது பன்னாட்டுக் கூடைப்பந்தாட்டக் கூட்டணிஎன்பது உலகில் மிகப்பெரிய பன்னாட்டுக் கூடைப்பந்தாட்டச் சங்கமாகும். இச்சங்கத்தில் என்.பி.ஏ. மற்றும் ஆஸ்திரேலியாவின் கூடைப்பந்துச் சங்கம் தவிர பல்வேறு தேசிய கூடைப்பந்துச் சங்கங்கள் உள்ளன. இச்சங்கம் பல நாடுகளிலுள்ள கூடைப்பந்தாட்ட வழக்கங்களையும் சட்டங்களையும் உருவாக்குகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு பன்னாட்டு போட்டியை ஃபீபா ஒழுங்குபடுத்தி நடத்துகிறது.

இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

1945 - ஹங்கேரி இரண்டாம் உலகப் போரில் தனது பங்கை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. 1947 - கொலை முயற்சி ஒன்றிலிருந்து மகாத்மா காந்தி உயிர் தப்பினார். 1969 - முதலாவது துடிமீன் கிராப் விண்மீன் தொகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. 1981 - ரொனால்ட் ரீகன் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவராகி 20 நிமிடங்களில் ஈரான் தான் 444 நாட்களாகப் பிடித்து வைத்திருந்த 52 அமெரிக்க பணயக் கைதிகளையும் விடுவித்தது. 1990 - அசர்பைஜானிய விடுதலைக்கு ஆதரவான போராட்டம் சோவியத் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.

1991 - சூடான் அரசு நாடெங்கும் இஸ்லாமியச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதில் நாட்டின் வடக்குப் பகுதி முஸ்லிம்களுக்கும் தெற்கில் வாழும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் மேலும் தீவிரமடைந்தது. 1992 - பிரான்சில் பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 85 பேர் கொல்லப்பட்டனர். 2001 - பிலிப்பைன்சில் இடம்பெற்ற புரட்சியில் தலைவர் ஜோசப் எஸ்ட்ராடா பதவியகற்றப்பட்டு குளோரியா மக்கபாகல்-அறாயோ தலைவரானார்.