யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கை
யாழ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் நினைவுதூபி அமைக்க இதுவரை எந்த ஒரு நிதி சேகரிப்பும் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13.01.2021 - 19.01.2021 வரை எந்த ஒரு நிதி சேகரிப்பும் இடம்பெறவில்லை.
அத்துடன் நிதி பல்கலைக்கழ மாணவர் ஒன்றிய கணக்கிற்கு மாத்திரமே கொண்டுவரப்பட்டு நினைவுத்தூபி அமைக்கப்படும்.
ஏனைய எந்த ஒரு நிதி கையாள்கைக்கும் மாணவர் ஒன்றியம் பொறுப்புக்கூறாது என யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் அறிவித்துள்ளது.
மாணவர் ஒன்றிய கணக்கு இலக்கம் - 16210010000061(மக்கள் வங்கி யாழ்ப்பாணப் பல்கலைக்களக கிளை)