இரணைத்தீவு கடற்றொழிலாளர்களுக்கு மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி...!
இரணைத்தீவு கடற்றொழிலாளர் தங்களது தேசிய அடையாள அட்டைகளை காண்பித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட முடியும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்ரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி இரணைத்தீவு மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இன்று கலந்துரையல் நடைபெற்றது.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர், இரணைத்தீவு மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதாக குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் இரணைதீவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுக்க இருப்பதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.