இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி...!
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று நடைப்பெற்றது.
போட்டியில் 328 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடி வந்த இந்திய அணி 7 விக்கட்டுக்களை இழந்து 359 ஓட்டங்களை பெற்றுக்கொண்டு வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
முன்னதாக தமது இரண்டாவது இனிங்ஸ்க்காக துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 294 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
அதேநேரம்இ இந்திய அணி அதன் முதல் இனிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 336 ஓட்டங்களையும், அவுஸ்திரேலிய அணி முதல் இனிங்ஸில் 369 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.