அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்க முன்னர் கமலா ஹாரிஸ் வெளியிட்டுள்ள தகவல்

அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்க முன்னர் கமலா ஹாரிஸ் வெளியிட்டுள்ள தகவல்

தற்போதைய சூழ்நிலையில், அமெரிக்காவில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது எளிதானதல்ல என்று கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பைடன் நாளை பதவியேற்கவுள்ளார். இப்பதவியேற்பின் போது, துணை அதிபராக கமலா ஹாரிஸூம் பதவியேற்கிறார்.

இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,

நாளை நாங்கள் பதவி ஏற்க செல்ல உள்ளோம். அந்த பணிகளை செய்ய தயாராக இருக்கிறோம். அமெரிக்காவை சீரமைப்பதற்கு நிறைய பணிகள் இருக்கிறது. அது எளிதாக இருக்க போவதில்லை.

கொரோனா தடுப்பூசி செலுத்துவது, மீண்டு வருவது, வேலை செய்யும் மக்கள், அவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம், போன்ற நிறைய பணிகள் திட்டமிடப்பட்டு இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.