பொரலஸ்கமுவ நகர சபை பணியாளர் ஒருவருக்கு கொரோனா...!
பொரலஸ்கமுவ நகர சபை பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்ட காரணத்தினால் நகரசபை வளாகத்தின் வரிப்பணம் செலுத்தும் பிரிவுகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
அந்த பிரிவின் பதினேழு உறுப்பினர்கள் தனிமைப்படுத்தளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்இ குறித்த கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்ட நபர் வெரஹேரவில் வசிப்பவராவர்.
குறித்த நபரின் தாயார் இறந்த பிறகு நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படிஇ குறித்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னரே அவருக்கும் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக பொரலஸ்கமுவ நகர சபை தலைவர் கே. டி. அருண பிரியஷாந்த தெரிவித்திருந்தார்