சுதந்திர தின நிகழ்வுகளை சுகாதார விதிமுறைகளுக்கமைய வெகு விமரிசையாகக் கொண்டாடுவதற்குத் தீர்மானம்..,!

சுதந்திர தின நிகழ்வுகளை சுகாதார விதிமுறைகளுக்கமைய வெகு விமரிசையாகக் கொண்டாடுவதற்குத் தீர்மானம்..,!

இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் சுகாதார விதிமுறைகளுக்கமைய வெகு விமரிசையாகக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர்  ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தொிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (18) ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான கலந்துரையாடலொன்றின்போதே அவர் இதனைத் தொிவித்துள்ளார்.

சுதந்திர தின நிகழ்வுகளுக்கான அணி வகுப்புகளில் கலந்து கொள்ளும் பாதுகாப்புப் படையினர் அனைவரும் ரெபிட் எண்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அதில் பங்குபற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அவர் மேலும் தொிவித்தார்.

இக்கலந்துரையாடலில் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவும் கலந்து கொண்டதோடு இம்முறை சுதந்திர தின நிகழ்வுகளை குறைந்தளவு எண்ணிக்கையிலானோரின் பங்கு பற்றுதலுடன் நடாத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொிவித்தார்.

பெப்ரவாி 04ம் திகதி சுதந்திர தினத்தன்று பௌத்த, இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத அனுட்டானங்கள் அவ்வவ்விடங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதோடு இந்நிகழ்வுகளுக்கான பயிற்சி நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவாி 01ம் திகதி முதல் 03ம் திகதி வரை நடைபெறுமெனவும் தொிவித்துள்ளார்.