யாழ். பருத்தித்துறையில் இருவருக்கு கொரோனா
யாழ். பருத்தித்துறை நகரில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை இன்று கண்டறியபட்டுள்ளது.
இத்தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தினார்.
மேல் மாகாணத்திலிருந்து வந்த இருவர் பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
அவர்கள் இருவரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் இருவருடனும் தொடர்புடையவர்கள் சுயதனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.