முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி...!

முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி...!

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.

காலியில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி அதன் முதல் இனிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து தமது முதல் இனிங்ஸ்க்காக துடுப்பாடிய இங்கிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 421 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அதன்பின்னர் தமது இரண்டாவது இனிங்ஸ்க்காக துடுப்பாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 359 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில், 74 என்ற வெற்றியிலக்கை நோக்கி தமது இரண்டாவது இனிங்ஸ்க்காக துடுப்பாடிய இங்கிலாந்து அணி 3 விக்கட்டுக்களை மாத்திரமே இழந்து போட்டியின் வெற்றியிலக்கை அடைந்தது.

இதற்கமைய, இரண்டு போட்டிகளை கொண்ட இந்த தொடரில் 1க்கு 0 என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கின்றது.