
கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்திலிருந்து சிறைக்கைதியொருவர் தப்பியோட்டம்!
பொலனறுவை - வெலிகந்த கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த தொற்றாளர் ஒருவர் இன்று (17) மாலை அச்சிகிச்சை மத்திய நிலையத்திலிருந்து தப்பியோடியுள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி கடந்த 07ம் திகதி சிகிச்சைக்காக இச்சிகிச்சை மத்திய நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட சிறைக்கைதி ஒருவரே இவ்வாறு தப்பியோடியுள்ளார்.
மேற்படி தப்பியோடிய நபர் அண்மையிலிருந்த வயலொன்றில் மறைந்திருந்த வேளையில் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் மீண்டும் சிகிச்சை மத்திய நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக வெலிகந்த காவல் துறையினர் தொிவித்துள்ளனர்.