ஜோ பைடனினால் அமெரிக்கர்களுக்கு வழங்கப்படும் புதிய சலுகை...!

ஜோ பைடனினால் அமெரிக்கர்களுக்கு வழங்கப்படும் புதிய சலுகை...!

எதிர்வரும் 20 ஆம் திகதி அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள ஜோ பைடன், கொரோனா பரவல் காரணமாக வீழ்ச்சியடைந்த அமெரிக்க பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்காக நிவாரண நிதி ஒதுக்கீடு ஒன்றை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

நிவாரண நிதி தொகையாக 1.9 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் அமெரிக்க குடும்பங்களுக்காக வழங்க ஒதுக்கப்படுவதுடன், ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 1400 அமெரிக்க டொலர்கள் நேரடியாக வழங்கப்படும்.

கொரோனா தடுப்பூசிகளுக்காக 415 பில்லியன் அமெரிக்க டொலர்களும், சிறு தொழில்களுக்காக 440 பில்லியன் அமெரிக்க டொலர்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்ற பின் குறித்த நிவாரணப் நிதி ஒதுக்கீடை வழங்குவதற்கான அனுமதி அமெரிக்க காங்கிரஸின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.