கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்!

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்!

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா இம்முறை இடம்பெறாது என யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

நிலவுகின்ற கொரோனா சூழ்நிலை காரணமாக திருவிழாவை நடத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உரிய தரப்பினருடன் கலந்துரையாடி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை – இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை இணைக்கும் இணைப்பு பாலமாக கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா அமைந்துள்ளமை விசேட அம்சமாகும்.