கரி முத்துக்களுடன் ஐவர் கைது...!

கரி முத்துக்களுடன் ஐவர் கைது...!

நான்கு கரிமுத்துக்களுடன் பெண்ணொருவர் உட்பட 5 சந்தேகநபர்கள் காவல்துறை விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் மொனராகலை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் கைப்பற்றப்பட்ட நான்கு கரிமுத்துகளும் ஹம்பாந்தோட்டை வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கரிமுத்து விற்பனைகள் இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மீட்கப்பட்ட கஜமுத்துக்களின் பெறுமதிகள் தொடர்பான தகவல்கள் இதுவரையில் தெரியவரவில்லை.