மஹர சிறைச்சாலையின் கைதியொருவருக்கு வழங்கப்படவிருந்த இரண்டு கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றட்டது

மஹர சிறைச்சாலையின் கைதியொருவருக்கு வழங்கப்படவிருந்த இரண்டு கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றட்டது

மஹர சிறைச்சாலையின் கைதியொருவருக்கு வழங்குவதற்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

கைதியொருவரை பார்வையிட வந்த ஒருவரை உணவு பொதியுடன் பிரதான நுழைவாயிலுக்கு செல்ல மஹர சிறைச்சாலையின் உயர் அதிகாரி ஒருவர் தொலைபேசி ஊடாக அனுமதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் வருகை தந்த நபர் உணவு பொதியினை வைத்துவிட்டு சென்றுள்ள நிலையில் அதனை பரிசோதனை செய்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கையடக்க தொலைபேசிகளும், புகையிலை பொதியும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தால் சிறைச்சாலை புலனாய்வு பிரிவிற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.