யாழில் 74 குடும்பங்களைச் சேர்ந்த 288 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

யாழில் 74 குடும்பங்களைச் சேர்ந்த 288 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

யாழில் பெய்து வரும் தொடர் மழையினால் நேற்று காலை வரை 74 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் காலையிலிருந்து யாழ்ப்பாண குடாநாட்டில் பெய்த மழையின் தாக்கத்தின் காரணமாக 8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

யாழில் 74குடும்பங்களைச் சேர்ந்த 288 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்புகள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றார்.

இதேவேளை திங்கட்கிழமை காலையிலிருந்து நேற்று வரை யாழில் 149.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்துள்ளார்.

மேலும் 24 மணித்தியாலத்திற்கு இந்த மழையுடன் கூடிய காலநிலை தொடரும். வட பகுதியில் 100 மில்லி மீற்றர் எதிர்பார்க்கப்படுகிறது. காற்று 40- – 50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.