அரைகுறை எரிந்த நிலையில் யாழ் வீதியில் கிடந்த உடலம்

அரைகுறை எரிந்த நிலையில் யாழ் வீதியில் கிடந்த உடலம்

யாழ் அரியாலை ஆனந்தன்வடலிப் பகுதியில் அரைகுறை எரிந்த நிலையில் மனித உடல் ஒன்று வீதியில் கிடந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த உடலை நாய்கள் கொண்டு வந்து வீதியில் இழுத்து திரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இது தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இரண்டாம் இணைப்பு

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குடாநாட்டில் இரு நாட்களாக அடை மழை பெய்து வருகின்றது.

இந் நிலையில் நேற்றையதினம் யாழ் செம்மணி மயானத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் செம்மணி மயானத்தில் தகனம் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

முற்றும் எரியாத நிலையில் இருந்த சடலம் ஒன்றே இன்று காலை இவ்வாறு நாய்களால் கொண்டுவரப்பட்டு வீதியில் போட்டப்பட்ட நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Image may contain: outdoor

Image may contain: outdoor