யாழ் பருத்தித்துறையில் இடம்பெற்ற பெரும் சோகம்
யாழ்ப்பாணம் பருத்தித்துறை புலோலி பகுதியில் கொரோனா பயம் காரணமாக குடும்பப் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் வெளிமாவட்டத்தில் கல்வி கற்பிக்கும் புலோலியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவரின் , சகோதரன் உள்ளிட்ட நண்பர்கள், அருகிலுள்ள வீடொன்றையே பாவித்து வந்தனர்.
இந்நிலையில் ஆசிரியர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதையடுத்து, அந்த வீட்டிலேயே தொற்றாளர் மற்றும் சகோதரன், நண்பர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததுடன் பெற்றோர் அயல்வீட்டில் வசித்து வந்தார்கள்.
இதனையடுத்து நேற்று அவர்களிற்கு பிசிஆர் சோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று காலை குறித்த பெண் உயிரை மாய்த்துள்ளார்.
இதேவேளை இலங்கையில் கொரோனா தீவிரமடைந்த நிலையில், நாளுக்கு நாள் கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ளதோடு, சிலர் பயத்தின் காரணமாக தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.