கொழும்பு தேசிய மருத்துவமனையில் நாளொன்றிற்கு 200 பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள முடிவு...!

கொழும்பு தேசிய மருத்துவமனையில் நாளொன்றிற்கு 200 பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள முடிவு...!

கொழும்பு தேசிய மருத்துவமனையில் ஸ்தாபிக்கப்பட்ட பி.சி.ஆர் ஆய்வுக்கூடத்தில் நாளொன்றிற்கு இரு முறைகளில் 200 பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள முடிந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று முதல் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதுவரை கொழும்பு தேசிய மருத்துவமனையின் பி.சி.ஆர் பரிசோதனைகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் முல்லேரியா மருத்துவமனையினால் மேற்கொள்ளப்பட்டது.

இன்று முதல் 5 மணி நேரத்திற்குள்  பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகளை பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.