
பெருந்தோட்டப் பாடசாலைகளை மேம்படுத்துவதற்காக 2 ஏக்கர் காணி ஒதுக்கீடு...!
பெருந்தோட்டப் பாடசாலைகளை மேம்படுத்துவதற்காக தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களில் 2 ஏக்கர் காணியை ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
7 மாவட்டங்களில் உள்ள பெருந்தோட்டப் பாடசாலைகள் 354 ஐ மேம்படுத்துவதற்காக, குறித்த பாடசாலைகளுக்கு அண்மையிலுள்ள தோட்ட நிறுவனங்களின் நிர்வாகத்திலுள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டங்களில், குறைந்த பயன்பாட்டைக்கொண்ட காணிகளில் 2 ஏக்கர் உயர்ந்தபட்ச காணியை ஒதுக்கி வழங்குவதற்கு 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
குறித்த பாடசாலைகளுக்கு அப்பால் மேலும் 491 பாடசாலைகள் காணப்படுவதுடன், அவற்றின் தேவைகளுக்கமைய 2 ஏக்கர் உயர்ந்தபட்ச காணியை ஒதுக்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.