நாட்டில் கொரோனா தொற்று மேலும் அதிகாிப்பு!

நாட்டில் கொரோனா தொற்று மேலும் அதிகாிப்பு!

நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 569 பேரில் அதிகமானோர் களுத்துறை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கொவிட்19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய களுத்துறை மாவட்டத்தில் மேலும் 110 பேருக்கு நேற்று கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதுதவிர கம்பஹா மாவட்டத்தில் 88 பேருக்கும் கேகாலை மாவட்டத்தில் 52 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் 318 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் நேற்று தொற்றுறுதியானவர்களில் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணிகளுடன் தொடர்புடைய 45 ஆயிரத்து 164 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்களில் 39 ஆயிரத்து 333 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் 48 ஆயிரத்து 951 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதோடு, அவர்களில் 42 ஆயிரத்து 90 பேர் குணமடைந்துள்ளதாக கொவிட்19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முப்படையினரால் முன்னெடுத்து செல்லப்படும் 75 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 6 ஆயிரத்து 267 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, நேற்றைய தினம் நாட்டில் 13 ஆயிரத்து 224 பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, மட்டகளப்பு போதனா வைத்தியசாலையில் சிலருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் கணேசலிங்க கலாரஞ்சனி தெரிவித்துள்ளார்.

மட்டகளப்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.