
போலி ஆவணங்களை வழங்கி வாடகை வாகனங்களை விற்பனை செய்து வந்த இருவர் கைது!
வாடகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டு போலி ஆவணங்களைத் தயார் செய்து விற்பனை செய்து வந்த இடமொன்றை காவல் துறையினர் சுற்றிவளைத்துள்ளனர்.
மேற்படி சுற்றிவளைப்பின்போது 17 வாகனங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தொிவித்துள்ளனர்.
முல்லோியா காவல் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையிலேயே மேற்படி சம்பவ இடம் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.