ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை...!

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை...!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உயர்நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதித்துள்ளது

குறித்த குற்றச்சாட்டின் குற்றவாளியாக அவர் பெயரிடப்பட்டுள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாகல்கந்த சுதந்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற வான்படை அதிகாரி சுனில் பெரேரா ஆகியோரினால் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு அமைய சட்டமா அதிபரால் பிரதிவாதியான ரஞ்சன் ரமாநாயகவிற்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.