
பெரும் போக நெற் கொள்வனவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்...!
நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் 3 இலட்ச மெட்ரிக் டொன் பெரும் போக கால நெல் அறுவடையை கொள்வனவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்நிகழ்வு நெல் சந்தைப்படுத்தல் சபையின் அம்பாறை - அக்கறைப்பற்று களஞ்சிய வளாகத்தில் நடைபெறவுள்ளது.
விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், சந்தையில் அரிசி விலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும், கொள்ளைக்காரர்களிடம் இருந்து நுகர்வோரை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் இந்த நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.
அத்துடன் எதிர்காலத்தில் அரிசியின் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.