அவதானமாக இருங்கள்! யாழ். மக்களுக்கு எச்சரிக்கை

அவதானமாக இருங்கள்! யாழ். மக்களுக்கு எச்சரிக்கை

யாழில் 68 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாழ். மாவட்டத்தில் இன்று காலையிலிருந்து மழையுடன் கூடிய கால நிலை காணப்படுகின்றது.

இன்று காலை காலையிலிருந்து தற்போது வரை யாழில் 68.1மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

மேலும் 24 மணித்தியாலத்திற்கு இந்த மழையுடன் கூடிய காலநிலை தொடரும்.

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவவோடு தாழ்நிலப் பகுதிகளில் உள்ளவர்கள் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.