நினைவு தூபிக்கு மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டது..! முழுமையான விபரங்கள்..!
யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
எவ்வாறாயினும் குறித்த தூபியை மீள நிர்மாணிப்பதற்கு யாழ்ப்பாண பல்கலைகழக உபவேந்தர் சிறிசற்குணராசாவினால் அடிக்கல் நாட்டப்பட்டமையை அடுத்து பல்கலைகழக மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினர் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடித்து தகர்க்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அதே இடத்தில் மீள நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் பணிகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டன.
நினைவுத் தூபியை மீண்டும் அதே இடத்தில் சட்டபூர்வமாக நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா தெரிவித்தார்.
இந்த நிலையில், நினைவுத் தூபியை மீண்டும் அதே இடத்தில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, துணைவேந்தர் தலைமையில், மாணவர்கள் சிலரின் பங்குபற்றுதலுடன் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றது.
எவ்வாறாயினும் இன்று முழுவதும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
எனினும் அம்பாறை மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டத்தின் நகர் பகுதியிலும் இன்று வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்ததோடு மக்களின் நடமாட்டத்தையும் அவதானிக்கப்பட்டது