யாழில் இன்றைய மழையினால் 33 பேர் பாதிப்பு.

யாழில் இன்றைய மழையினால் 33 பேர் பாதிப்பு.

இன்று காலையிலிருந்து யாழ் மாவட்டத்தில் காணப்பட்ட   மழையுடன் கூடிய காலநிலையின்காரணமாக 8 குடும்பத்தை சேர்ந்த 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக   யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என் சூரியராஜ் தெரிவித்தார்
 

இன்று காலை லிருந்து யாழ்ப்பாண குடாநாட்டில் பெய்த மழையின் தாக்கத்தின் காரணமாக8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது


தெல்லிப்பளை ,மருதங்கேணி சாவகச்சேரி, பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 08குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியை சேர்ந்த 8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ள தாகவும் யாழ் மாவட்டஅனர்த்த முகாமைத்துவ பிரிவின்  பிரதி பணிப்பாளர் தெரிவித்தார்

  குறித்த பாதிப்புகள் தொடர்பானவிபரங்கள் சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்