இரணைமடு குளத்தின் 14 வான்கதவுகளும் திறப்பு!

இரணைமடு குளத்தின் 14 வான்கதவுகளும் திறப்பு!

இரணைமடு குளத்தின் 14 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக குளத்தின் நீர்மட்டம் அதிகரித்தமையை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன பொறியிலாளர் எஸ்.செந்தில்குமரன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இரணைமடு குளத்தை அண்டிய பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.

இதேவேளை நிலவும் மழையுடனான வானிலையை அடுத்து ராஜாங்கணை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால் கருவெலகஸ்வௌ - வனாத்துவில்லு பிரதேச செயலாளர் பிரிவின் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக நீர்வழங்கல் திணைக்கம் தெரிவித்துள்ளது.

அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. .

இதற்கமைய எதிர்வரும் 6 மணித்தியாலங்களுக்கு கருவெலகஸ்வௌ - வனாத்துவில்லு பிரதேச செயலாளர் பிரிவில் சிறியளவான வெள்ளப்பெருக்கு நிலை காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் தற்போது குறித்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால் கலாஓயாவை பயன்படுத்துவது அபாயமானது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் கலாஓயாவை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக செயற்படுமாறும் கோரப்பட்டுள்ளது.