
பொருளாதார வளர்ச்சிக்காக அமைச்சர் பந்துல குணவர்த்தன நடவடிக்கை...!
உலக ரீதியாக காணப்படும் கொரோனா தொற்று அச்சத்திலும் நாட்டின் அனைத்து வர்த்தக நிலையங்களையும் முறையாக நிர்வகித்துக் கொண்டு செல்வதாக கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தார்.
தற்கால வர்த்தகத்தின் நிலைமை குறித்து நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.
கொரோனா தொற்று காரணமாக நாட்டில் பொருளாதார நிலைமை பாரிய அளவில் பாதிக்கப்பட்ட போதிலும் எதிர்வரும் கிழமைகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கட்டுப்பாட்டுடன் நுகர்வோருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.